தமிழ் மன்றம்

திரு. ஜான் லாரன்ஸ் மற்றும் திரு. தாஸ் பிரிட்டோ தலைமையில் தமிழ் மன்றம் பல சிறப்பான தமிழ் பணி திட்டங்களை துவக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அதில் முக்கியமாக சங்க சிறார்களுக்கான தமிழ் பள்ளி இயேசுவின் உயிர்ப்பு பெரு விழா தினத்தன்று (Apr 12th, 2009 ), தமிழ் ஆசிரியைகள் குத்து விளக்கு ஏற்றி துவக்கப்பட்டது.

சிறார்களின் வயது மற்றும் தமிழ் மொழித் திறனை கருத்தில் கொண்டு, தமிழ் வகுப்புகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

சங்க உறுப்பினர்களின் ஆர்வத்தாலும், ஆசிரியைகளின் கடும் முயற்சியாலும் தமிழ் வகுப்புகள் ஒவ்வொரு தமிழ் கத்தோலிக்க சங்க கூட்டத்தின்போது செவ்வனே நடந்து வருகிறது. தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் ஆசிரியைகள் மாணவர்களுக்கு வீட்டுபாடங்கள் கொடுத்து, மாணவர்களின் பதிலை திருத்தி வருகின்றனர்.

தமிழ் மன்றம், நடப்பு ஆண்டில் தமிழ் பள்ளியை இன்னும் சிறப்பாக நடத்த பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

தமிழ் பள்ளியை தவிர, தமிழ் மன்றப் பொறுப்பாளர்கள் குறித்து ஞாயிறு அன்று தமிழில் சிலுவைப்பாதை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டதின்போது கிறிஸ்து பிறப்பு கவிதை, தமிழ் நாடகம் மற்றும் குறும்படம் என பல்வேறு பணிகளில் முக்கிய பொறுப்பாற்றினர்.